மோடி அமெரிக்க பயணம் | டிரம்ப் - மோடி சந்திப்பு | Narendra Modi Trump

மோடி அமெரிக்க பயணம் | டிரம்ப் - மோடி சந்திப்பு | Narendra Modi Trump
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 21-ஆம் தேதி டெலாவேரில் நடைபெறும் 4-ஆம் ஆண்டு க்வாட் தலைவர்கள் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பங்கேற்க உள்ளார். மோடி வரும் சனிக்கிழமையன்று மூன்று நாள் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார். மிச்சிகனில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் முன்னாள் அதிபர் டிரம்ப், அடுத்த வாரம் மோடியுடன் சந்திப்பு நடைபெறும் என அறிவித்துள்ளார். டிரம்ப் அதிபராக இருந்தபோது மோடியுடன் நெருங்கிய நட்பை பகிர்ந்து கொண்டார், ‘ஹவுடி மோடி’ மற்றும் ‘நமஸ்தே டிரம்ப்’ போன்ற நிகழ்வுகள் இதற்கு முன்பு நடைபெற்றது. அமெரிக்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவர்களின் சந்திப்பு ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.