கலைஞரின் வாரிசுகள் என்பதை எம்.பி-க்கள் நிரூபித்துவிட்டனர்….. ஸ்டாலின் உருக்கமான பேச்சு!

பொருளாதார குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு வளர்ச்சையை நோக்கியே செல்கிறது

Mar 11, 2025 - 16:13
Mar 11, 2025 - 16:15
 4
கலைஞரின் வாரிசுகள் என்பதை எம்.பி-க்கள் நிரூபித்துவிட்டனர்….. ஸ்டாலின் உருக்கமான பேச்சு!

கலைஞரின் வாரிசுகள் என்பதை எம்.பி-க்கள் நிரூபித்துவிட்டனர்….. ஸ்டாலின் உருக்கமான பேச்சு!

திமுக ஆட்சியில் அனைத்து நலத்திட்டங்களும் சொன்னது போலவே செயல்படுத்தப்பட்டு வருகிறது அதுவும் துரிதமாக அனைத்து பணிகளும் முடிக்கப்படுகிறது.

செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் அனைத்தையும் நானே வந்து திறந்து வைக்கிறேன். அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களும் உடனடியாக அரசாணையாக மாறுவது உறுதி. இப்படி துரிதமாக செயல்படும் காரணத்தால் தான் இந்தியாவின் 2 - வது வளர்ந்த பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.

பொருளாதார குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு வளர்ச்சையை நோக்கியே செல்கிறது திறமையான, வளமான, உண்மையான ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம். சில தடைகள் மட்டும் இல்லாமல் இருந்தால் தமிழகம் இன்னும் வளர்ச்சியை நோக்கி செல்லும்.  

தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்ப பெற வைத்தது நமது தமிழக எம்.பிக்கள் அவர்களுடைய போர்க்குணத்திற்கு வாழ்த்துகள்.

கருணாநிதியின் வாரிசுகள் என்பதை நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்.பிக்கள் நிரூபித்து விட்டனர். மத்திய அரசின் சதிகளுக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து போராடுவதால் பொறுக்க முடியவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.