எம்புரான் தயாரிப்பாளர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை!
'லூசிபர்

எம்புரான் தயாரிப்பாளர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை!
பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள எம்புரான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனையை தொடங்கியுள்ளது.
சமீபத்தில் 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக பிரித்விராஜ் இயக்கத்தில் 'எல்2 எம்புரான்' திரைப்படம் வெளியானது.
இந்த படத்தை கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
தம்புரான் திரைப்படம் ஹிந்து மதத்தினரை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்று சர்ச்சை கிளம்பியது.
ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பலறும் இந்த படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 2 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன.
இந்த நிலையில், கோகுலம் குழும நிறுவனங்களில் ஒன்றான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோகுலம் கோபாலன் வீடு உள்பட கோகுலம் சிட்பண்ட் தொடர்பாக 5 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோகுலம் குழுமத்தின் ஒரு நிறுவனமான கோகுலம் மூவிஸ் தயாரித்த எம்புரான் திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நிறுவனம் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.