வக்ஃப் திருத்த சட்டத்திற்கு இடைக்கால உத்தரவு!

மத்திய அரசு ஈடுபடக்கூடாது

Apr 17, 2025 - 15:36
 6
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு இடைக்கால உத்தரவு!

வக்ஃப் திருத்த சட்டத்திற்கு இடைக்கால உத்தரவு!

வக்ஃப் திருத்த சட்டத்தின்படி, எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 17) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், திமுக சார்பில் துணைப் பொதுச் செயலாளார் .ராசா, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய், அகில இந்திய மஜ்லிஸ்--இத்தேஹாதுல் முஸ்லிமீன் எம்பி அசாதுதீன் ஒவைசி, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் அனைத்தும், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏப்ரல் 16 விசாரணைக்கு வந்தது.

அப்போது,”வக்ஃப் வாரியங்களில் இந்துக்கள் இடம்பெறுவது போல், இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்கள் இடம்பெற முடியுமா?” என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்தநிலையில், மத்திய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃப் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த வழக்கானது அடுத்து விசாரணைக்கு வரும்வரை, மத்திய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் நியமிக்கப்பட கூடாது, வக்ஃப் சொத்துக்களை அங்கீகரிப்பது அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.