ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிமன்றம் அதிரடி
மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளது

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிமன்றம் அதிரடி
கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்தது உயர்நீதிமன்றம்.
கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது நீதிபதிகள் தவெகவுக்கு நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பல்வேறு கண்டனங்களை எழுப்பிய உயர்நீதிமன்றம் நீதிமன்றம் அநீதியை பார்த்து கண் மூடிக்கொண்டு இருக்க முடியாது எனவும், மொத்த உலகமுமே இதற்கு சாட்சி என தெரிவித்துள்ளது.
ஆதவ் அர்ஜூனா மீது சட்டப்பூர்வமான நடிவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பொறுப்பற்ற பதிவுகளில் காவல்துறை கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆதவ் அர்ஜூனாவின் எக்ஸ் பக்க பதிவு நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டதை அடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கரூரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளது. வீடியோக்களை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது.
வழக்கு ஆவணங்களை உடனடியாக கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், அரசு அமைதியாக இருக்க முடியாது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் இருந்து எது கட்சியை தடுத்தது.
குடிநீர் வழங்குவதற்கு கூட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சம்பவ இடத்தில் மக்களை கைவிட்டு தலைவரும், ஏற்பாட்டாளர்களும் பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளனர் உள்ளிட்ட காட்டமான கருத்துக்களை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்துக்கு பொறுப்பேற்காத தவெகவின் செயலுக்கு நீதிமன்றம் கடும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டிருந்த ஆதவ் அர்ஜூனாவின் பின்புலம் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.