Race Track கிற்கு முன் Rest இல்லை: அஜித்தின் Busy New Life!
#ajithkumar #motorsport #carracing #indiancinema #actorajith #ak #barcelona #enduranceracing

Race Track கிற்கு முன் Rest இல்லை: அஜித்தின் Busy New Life!
அண்மையில் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் நடிகர் அஜித்குமார் பேசும்போது , தனக்கு இப்போது தூக்கம் ஒரு பெரிய சவாலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் . "ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே என்னால் தூங்க முடிகிறது . அந்த அளவுக்கு தூக்கமின்மையும் எனக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது," என்று அவர் கூறியுள்ளார். விமானப் பயணத்தின்போது மட்டுமே தனக்கு ஓய்வு கிடைப்பதாகவும், ஆனால் அப்போதும் தான் தூங்கி விடுவதாகவும் அஜித் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், "கார் ரேஸ்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய பிறகு, சினிமா, வெப் தொடர்கள் பார்க்கக்கூட எனக்கு நேரம் கிடைப்பதில்லை," என்று கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அஜித்குமாரின் அணி ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் பந்தயத்தில் மூன்றாவது பரிசைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார். அஜித்குமார், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 64-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அஜித் கூறியுள்ளார்.