சட்ட விதிகளை மீறிய இர்ஃபான்

May 22, 2024 - 02:13
Sep 9, 2024 - 23:28
 12
சட்ட விதிகளை மீறிய இர்ஃபான்

இர்ஃபான் வீவ்ஸ் என்னும் யூடூய்ப் சேனலை வைத்து பிரபலமான புட் ரிவீவர் இர்ஃபானுக்கு சுகாதரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருக்கிறது.

தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் வெளியிட்டுள்ளார். வெளிநாட்டில் பரிசோதனை செய்து வந்து பாலினத்தை அறிவித்துள்ளார் இர்ஃபான். இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரையில் கருவில் வளரக்கூடிய குழந்தை ஆண் குழந்தையா இல்லை பெண் குழந்தையா eன பரிசோதனை செய்வதும் குற்றம். செய்வதற்கான முயற்சியை மேற்கொள்வதும் குற்றம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் சில நாடுகளில் இது போன்ற தடை சட்டம் கிடையாது. எனவே இர்பாஃனுக்கு வெளிநாட்டிற்கு சென்ற கருவுற்று இருக்கு தனது மனைவிக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டதாகவும்,

இதனை அறிவிக்கும் விதமாக தனது நண்பர்கள் ,மற்றும் குடும்பத்திரனுடன்  பார்ட்டி வைத்து அனைவருக்கும் பிரியாணி போட்டு கொண்டாடியுள்ளார்.

இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து சட்டவிதிகளை மீறியதாக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையில் புகார் அளித்துள்ளது.