அதிமுகவுக்கு ஒருங்கிணைப்புக்குழு கடிதம்!

Jun 15, 2024 - 01:58
Sep 9, 2024 - 23:17
 11
அதிமுகவுக்கு ஒருங்கிணைப்புக்குழு கடிதம்!

அதிமுகவை ஒன்றிணைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஒபிஎஸ், டிடிவி தினகரனுக்கு ஒருங்கிணைப்புக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் சசிகலா அதிமுகவை ஒன்றினைக்க வேண்டுமெனவும், அது வரை உண்ணாவிரதம் இருக்க போவதாகவும், கட்சி தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பி தங்களை பற்றிய கருத்துகளையும் தற்போது எந்த கட்சியில் உள்ளனர் என்பதையும் தெரிவிக்க வேண்டுமெனவும், அவ்வப்போது இது தொடர்பான சில தகவல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, .பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஒருங்கிணைப்புக் குழு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.