இறுதிக்கு தேர்வாவது யார்?

May 25, 2024 - 01:42
 10
இறுதிக்கு தேர்வாவது யார்?

ஐபிஎல் போட்டியின் ’குவாலிஃபையர் 2’ ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி, கோப்பைக்காக கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை நடத்தும். 

நடப்பு ஐபிஎல் போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் சுற்றில் மோதிய 10 அணிகளில், கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய 4 அணிகள் போட்டி போட்டிக் கொண்டு பிளே-ஆஃப் சுற்றில் இடம் பிடித்தன.

அதில் முதலில் நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் போட்டியிட்டன. அதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றது. இதனிடையே, இரண்டாவது சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடினர். அதில் ஆர்சிபியை ஆர்.ஆர் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இன்று  நடக்கவுள்ள ஹைதராபாத் மற்றும் ஆர்.ஆர் இடையேயான எலிமினேட்டட் போட்டியில் வெல்லும் அணி ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதும்.

இன்றைய ஆட்டம் ஹைதராபாத் மற்றும் ஆர்.ஆர் அணிக்கு முக்கிய ஆட்டமாக அமைந்துள்ளது. ஏனெனில் இரு அணிகளுமே கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு பயிற்சி பெற்று வருகிறது. அதனை முன்னிட்டு இன்றைய ஆட்டத்தில்  விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற மேலும் பல செய்திகளை அறிந்துகொள்ள சேனல் 5 நியூஸ் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.