மோடி அரசு தமிழுக்கு எதிரானது இல்லை.... மனமுருகி மன்னிப்பு கேட்ட தர்மேந்திர பிரதான்!
நானும் தமிழ் தாய்க்கு பிறந்தவன் தான்!

மோடி அரசு தமிழுக்கு எதிரானது இல்லை.... மனமுருகி மன்னிப்பு கேட்ட தர்மேந்திர பிரதான்!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக திமுகவினர் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தற்போது இது குறித்து மீண்டும் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டு சில விஷயங்களை கூறியுள்ளார்.
எனது ஒடியா சமுதாயத்தின் கடவுள் ஜெகன்நாத் தான் எல்லாமுமாக இருக்கிறார் பூரியின் அரசர் என்பவர் வெறும் அரசர் மட்டுமல்ல அவர் ஒரு பிலாஷபர்.
எனது அரசர் திருமணம் செய்துகொண்டது காஞ்சி இளவரசி தான் எனது அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவர் நான் தமிழகத்தை சேர்ந்த தாயின் மகன்.
எனது சமுதாயத்தில் அம்மா, சகோதரிகள் தான் எல்லாவற்றையும் விட மேலானவர்கள் என நினைக்கிறோம்.
எனது வார்த்தைகள் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்.
தமிழ் என்பது பழமையான மொழி தமிழை யாரும் ஒதுக்கி வைக்கவில்லை நாங்கள் தமிழ் மொழிக்காக பாடுபட்டு வருகிறோம்.
உண்மை எப்போதும் வலி நிறைந்ததாகவே இருக்கிறது தேசிய கல்விக் கொள்கை மூலம் எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்க முயலவில்லை.
பிரதமர் மோடி அரசு தமிழுக்கு எதிரானது இல்லை தமிழை நானும் விரும்புகிறேன் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் படிப்போர் குறைந்து வருகிறார்கள்.