மோன்தா புயலின் எதிரொலி – விமானங்கள், ரயில்கள் ரத்து!

தீவிர புயலாக மாறி கரையை கடக்கும்

Oct 28, 2025 - 13:06
 5
மோன்தா புயலின் எதிரொலி – விமானங்கள், ரயில்கள் ரத்து!

மோன்தா புயலின் எதிரொலி – விமானங்கள், ரயில்கள் ரத்து!

மோன்தா புயல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது ஆந்திராவின் மசூலிபட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 270 கி.மீ தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள நிலையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

வடக்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் புயல் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திராவில் இன்று மாலை அல்லது இரவில் தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் காக்கிநாடா துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் நிலையில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மோன்தா புயலின் தாக்கத்தின் காரணமாக ஆந்திராவில் இன்றும் நாளையும் 67 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜயவாடா விசாகப்பட்டினம், ராஜமுந்திரி உள்ளிட்ட 12 இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.