ஆட்டத்தை ஆரம்பிக்கும் திமுக.....சட்டமன்ற தேர்தலுக்கு திமுக போட்ட மாஸ்டர் பிளான்!
திராவிட கட்சிகள் கையாளும் யுக்திகள்

ஆட்டத்தை ஆரம்பிக்கும் திமுக..... சட்டமன்ற தேர்தலுக்கு திமுக போட்ட மாஸ்டர் பிளான்!
சமூக நீதி சமத்துவம் சாதிய பாகுபாடு என்று பேசக்கூடிய திமுக தேர்தலிலும் சாதி ரீதியான பொறுப்பாளர்களை தான் போட்டுள்ளது.
இந்த சமூக நீதி எல்லாம் மேடைப்பேச்சுக்கு வேண்டுமானால் எடுபடலாம் தேர்தல் களத்தில் திமுக எடுத்த முடிவு தான் சரி.
இது திமுக மட்டும் காலம் காலமாக எடுப்பதில்லை, திராவிட கட்சிகள் கையாளும் யுக்திகள் தான் இவை. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானோ சில தொகுதிகளில் சாதி ரீதியாக வேட்பாளர்களையோ, மாவட்ட பொறுப்பாளர்களையோ நிறுத்துவதில்லை.
ஆனால், இவர்கள் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகின்றனர். ஒரு பக்கம் இது சமூக நீதி, சமத்துவம், சாதிய பாகுபாடின்மை என்றாலும் கூட தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் திராவிட கட்சிகள் கையாளும் யுக்திகள் தான் வெற்றி பெறுகின்றன.
அந்த வகையில் தான் திமுக இம்முறையும் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறது.
கே.என்.நேருவுக்கு திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்கள், இந்த தொகுதியை பொறுத்தவரை தான் சார்ந்த சமுதாய மக்களும் பிற சமூதாயத்தினருடனான நட்பெயரும் கட்சிசதமாக செயல்படுவார் என்பதை கருத்தில் கொண்டு களமிறக்குகின்றனர்.
எ.வ.வேலுவுக்கு விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர் இந்த தொகுதிகளை பொறுத்தவரை தான் சார்ந்த சமுதாய மக்களும் அதை தாண்டி ஏவாமலேயே பணத்தை வாரி இறைக்கும் எ.வ வேலு என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியால் போற்றப்பட்டவரையே இறக்கியுள்ளது.
தங்கம் தென்னரசுவுக்கு மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் இந்த பகுதியில் கணிசமாக முக்குலத்தோர் சமுதாயம் இருப்பதை கருத்தில் கொண்டு தென்னரசுவை இறக்கியுள்ளது.
ஆ.ராசாவுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக நியமித்துள்ளது திமுக.
இந்த தொகுதியில் பெரும்பான்மையாக தலீத் சமூக வாக்குகளை கவர்வதாகவே ஆ.ராசாவை இறக்கியுள்ளனர்.
கனிமொழிக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி இந்த தொகுதிகளை பொறுத்தவரைக்கும் கணிசமாக நாடார் சமுதாய வாக்குகள் உள்ளது. இதை குறி வைத்து தான் கனிமொழியை களமிறக்கியுள்ளது திமுக.
இந்த சூழலில் நேற்றே கனிமொழி தனது பணியினை செய்ய தொடங்கி விட்டார்.
சேலம், ஈரோடு, நாமக்கல் இந்த தொகுதிகளுக்கு சக்கரபாணியை நியமித்துள்ளது திமுக
செந்தில் பாலாஜிக்கு கோவை, கரூர், திருப்பூர், நீலகிரி
செந்தில் பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களிருந்தாலும் எங்களுக்கு அவர் தான் வெற்றியை தேடி தருவார் என்பதை உணர்ந்த ஸ்டாலினும், உதயநிதியும் அவரையே நியமித்துள்ளனர்.
இதை எதிர்கொள்ள எதிர்கட்சிகள் எந்த அளவுக்கு செயல்படும் என்பது கேள்விகுறியாகத்தான் உள்ளது.
ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் சொந்த கட்சிக்கே உள்ளடி வேலை பார்த்ததும் நடந்துள்ளது.
இந்த நிலையில் தான் திமுக மேடைக்கு மேடை 200 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்றும் கூறி வருகிறது.