உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த இந்தியா! ஷாக் அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ!

May 16, 2024 - 01:24
Sep 9, 2024 - 23:19
 25
உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த இந்தியா! ஷாக் அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ!

9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்க உள்ள இஸ்ரோவின் மங்கல்யான்2 விண்கலம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

நிலவுக்கு மட்டுமல்ல செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அழைத்து செல்ல வேண்டுமென்பது பல உலக நாடுகளின் கனவாக உள்ளது. அதனாலேயே தான் செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது, தண்ணீர் கிடைப்பதற்கு என்ன வழி என்ற ஆராய்ச்சிகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டே வருகின்றன. இன்னும் ஒருபடி மேலே சென்று பூமியிலேயே செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற அனுபவத்தை விண்வெளி வீரர்கள் பெற ஏற்பாடு செய்துள்ளது.

முக்கியமாக வரும் 2030ல் செவ்வாய்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்பது நாசாவின் கனவுத்திட்டம். அப்படியிருக்க முதல் வெற்றியை தொடர்ந்து தற்போது 2வது முறையாக செவ்வாய் கிரகத்தில் பணி புரிந்து வரும் இஸ்ரோ நாசாவின் பெர்ஸ்வரன்ஸ் ரோவரை போலவே ரோவர் மற்றும் ஹெலிக்காப்டரை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு, ஒரு சூப்பர் சோனிக் பேராசூட் மற்றும் செவ்வாய் கிரகத்தில் ரோவரை நிலை நிறுத்துவதற்கான ஸ்கை க்ரேனை உருவாக்கும் பணியும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

அதாவது செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் பணியானது கடந்த 1960களிலேயே தொடங்கி விட்டாலும் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா தான். கடந்த 2014ம் ஆண்டு செவ்வாய்க் கோளின் சுற்று வட்ட பாதைக்குள் மிகக் குறைந்த செலவில் விண்கலத்தை நிலை நிறுத்திய 4வது நாடு என்ற சாதனையை படைத்து உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது இஸ்ரோ.

செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கிய 3வது நாடு என்ற பெருமையை தன் வசமாக்க வேண்டுமென்ற ஆவலோடு பணியாற்றி வருகிறது இந்தியா.

ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் விண்கலம் ஆராய்ச்சிக்காக 4 முக்கிய கருவிகளை எடுத்து செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த விண்கலம் எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுமென தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.